Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Erode 2025 01 17

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் வாங்க நாளை கடைசி நாள் மேலும் அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது.10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.

தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருகின்றனர்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி வாக்குப்பதிவும், 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து