Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: களத்தில் 981 வேட்பாளர்கள் : இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Voting-list 2023 08 18

Source: provided

புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டெல்லியின் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (20-ம் தேதி) கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இவற்றில் புதுடெல்லி தொகுதியில் அதிக அளவிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று கஸ்தூர்பா நகர் தொகுதியில், குறைந்த அளவிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து