எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று மாலை வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ம் தேதி நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கபப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்து வந்தது. மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் கடந்த ஜனவரி 14ம் தேதி மாலை நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வரும் இன்றுடன் (19ம் தேதி) நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பம்பையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் 20ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாட்டு காலம் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


