எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டாக்கா: வங்காளதேசத்தில் பல்வேறு முறை படுகொலைக்கான சதி திட்டங்கள் தீட்டப்பட்டதாக தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, 20-25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து நாங்கள் உயிர் தப்பினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்திற்கு ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். வங்காள தேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா புறப்பட்டார். இந்தியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்நிலையில், ஹசீனா பேசிய ஆடியோ உரை ஒன்று, வங்காளதேச அவாமி லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ஹசீனா இருவரும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணம் நேரிடுவதில் இருந்து தப்பிய விவரங்களை கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு முறை அவரை கொல்ல சதி திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆகஸ்டு 21-ந்தேதி படுகொலையில் இருந்து தப்பினேன் என்றே நான் உணர்கிறேன். கொதலிபாராவில் நடந்த பெரிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பினேன். 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதியும் படுகொலையில் இருந்து உயிர் தப்பி இந்த முறை நான் உயிர் பிழைத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் என்னை கொல்ல எப்படி திட்டமிட்டனர் என்பது உங்களுக்கே பின்னர் தெரிந்திருக்கும். ஆனால், நான் ஏதேனும் செய்ய வேண்டும் என இறைவன் விரும்புகிறார். அதனாலேயே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


