எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்படனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.
பாகிஸ்தானில்...
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
காலக்கெடு நிறைவு...
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை கடந்த 12ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. காலக்கெடு விதித்திருந்தது.
கூடுதல் அவகாசம்....
ஆனால், பி.சி.சி.ஐ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்க ஐ.சி.சி.-யிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அணி தேர்வு கூட்டம் நிறைவு பெற கால தாமதம் ஏற்பட்டது. இதனால் அணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை.
சுப்மன் கில்...
இந்நிலையில், நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து அணியை அறிவித்தனர். இந்த அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அதே சமயம் விஜய் ஹசாரே தொடரில் ரன் வேட்டை நடத்திய கருண் நாயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும், டி20 அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி வரும் சாம்சனுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மட்டும்).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


