Idhayam Matrimony

கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளுடன் பிப். 14-ல் மத்திய அரசு பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Farmer-2024-12-02

Source: provided

சண்டிகார் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் போராடி வரும் விவசாயிகளுடன் பிப்ரவரி 14-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு, அரசு சட்டப்படியான உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 11 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இந்த குழுவினர், விவசாய சங்க தலைவரான ஜகஜித் சிங் தல்லேவால் என்பவரையும் சந்தித்து பேசினர்.

அவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அது நேற்று 55-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுடன் பிப்ரவரி 14-ந்தேதி மாலை 5 மணியளவில் சண்டிகாரில் கூட்டம் நடைபெறும். அதில், விவசாயிகளுடன் மத்திய அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

இதனால், தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்து இருக்கிறார். இதனை மற்றொரு விவசாய தலைவரான சுக்ஜித் சிங் ஹர்தோஜாண்டே கூறியுள்ளார். எனினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தல்லேவால் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து