எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'யாழ்ப்பாணம் கலாச்சாரம் மையம்' திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாச்சார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது." இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


