Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தம் தாமதம் எதிரொலி: காசாவில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 19 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      உலகம்
Israel

Source: provided

காசா முனை : போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் இஸ்ரேல் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே நேற்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை நேற்று விடுதலை செய்திருக்க வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, விடுதலை செய்யப்பட உள்ள பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரின் பெயர் விவரத்தை இஸ்ரேல் நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் விவரத்தை ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் மதியம் 12 மணிக்குள் (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) வெளியிட்டிருக்க வேண்டும். 

ஆனால், பெயர் விவரத்தை வெளியிடாமல் ஹமாஸ் ஆயுதக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் ரபா, கான் யூனிஸ், காசா சிட்டி, வடக்கு காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அமலாக இருந்த இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் 3 மணிநேர தாமதத்திற்குப்பின் மதியம் 2.45 மணியளவில் அளவில் அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து