எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது.
இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், யாருக்கும் காயம் உள்பட பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து சம்பவத்தை கேள்விப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து ஆய்வு நடத்தினார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


