Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் பாட்டல் ராதா

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      சினிமா
Patal-Radha 2025-01-20

Source: provided

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. நீலம் புரொடக்‌ஷன்ஸ் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

சஞ்சனா, ஜான் விஜய், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஜனவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் அமீர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின் ஆகிய இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். விழாவில் பேசிய, இயக்குநர் வெற்றிமாறன், ’பாட்டல் ராதா’ திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும்  போதை அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது என்று கூறினார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் பேசுகையில், “குடியால் பல குடும்பங்கள் அழிந்து போனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும், நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து