Idhayam Matrimony

இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு - அழகப்பா பல்கலை.யில் புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார் - மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாளை வழங்குகிறார்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : இன்று முதல் (21, 22-ம் தேதி) 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார். தொடர்ந்து இன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாளை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மாவட்டந்தோறும்...

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார்.

2 நாட்கள் பயணம்...

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று (21-ம் தேதி - செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதல்வரும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக சிவகங்கை செல்கிறார்.

புதிய நூலகத்தை...

தொடர்ந்து இன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாளை சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து