எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு சா்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த அணையின் கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி, 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை இரு தரப்பினரிடமும் முன்வைத்தனர்.
இந்த வழக்கு 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறதா? அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அந்த தீர்ப்பில் எந்த பிரச்னையும் இல்லை, அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் எனத் தெரிவித்தனர்.
தற்போது இந்த விவகாரத்தின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? சுருக்கமான விவரங்களை இரு தரப்பினரும் தாக்கல் செய்யுங்கள். சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே அமைத்த மேற்பார்வைக் குழு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா? அல்லது மத்திய அரசு அமைத்துள்ள புதிய அணைப் பாதுகாப்புக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற விவரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இரு தரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் எட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


