Idhayam Matrimony

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Mathu 2023 04 15

Source: provided

பாட்னா : பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 4 நாட்களுக்கு பிறகு வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அனைத்து இறப்புகளும் லாரிய காவல் நிலைய பகுதியில் பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்த நிலையில், அதில் ஒருவர் டிராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

"முதல் மரணம் கடந்த 15ம் தேதி நிகழ்ந்தது. ஆனால் இன்றுதான் (ஜன. 20) இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. மீதமுள்ள 5 மரணங்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏழு உடல்களும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தகனம் செய்யப்பட்டன. இதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "எனது சகோதரர் பிரதீப் தனது நண்பர் மனிஷுடன் கள்ளச்சாராயம் அருந்தினார். இருவரும் இறந்துவிட்டனர்" என்றார். பீகாரில் மது விற்பதற்கும் அருந்துவதற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து