எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலக்காடு, போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 இன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டுள்ளன. கோழிக்கோடு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகாததால், பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்பு கோரினர். பதஞ்சலியின் போலி விளம்பரத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


