எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 47-வது அதிபராக திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பதவியேற்றார். இதற்கு முன்னதாக வாஷிங்டனுக்கு வருகைதந்த டிரம்ப், கேபிடல் ஒன் அரங்கில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றி உரையாற்றினார். அப்போது, நாளை சூரியன் மறையும் நேரத்தில் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது: வெனிசுலாவில் இருந்து அலைஅலையாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ட்ரென் டி அரகுவா அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்க வரலாற்றில் அதிபரின் மிகச் சிறந்த முதல் நாள் அமைய இருக்கிறது. மிகவும் அசாதாரணமான முதல் 100 நாள்களை மக்களுக்கு வழங்கப் போகிறோம். நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியையும் சரிசெய்வதற்கான பல உத்தரவுகளை இயற்றவுள்ளேன். ஜோ பைடன் வெளியிட்ட பல உத்தரவுகளை ரத்து செய்வேன்.
நான்கு ஆண்டுகால அமெரிக்க வீழ்ச்சிப்பாதை மூடப்படும். வலிமை, செழிப்பு, கண்ணியம் மற்றும் பெருமையின் புத்தம்புதிய காலத்தை அமெரிக்கா தொடங்கும். அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, செனட்டர் ராபர்ட் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பான மீதமுள்ள ஆவணங்களை வெளியிடுவேன் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


