எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போகோடா : பார்க் அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இ.எல்.என். அமைப்பினர் படுகொலை செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் இருந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி கொரில்லா ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 80 பேர் உயிரிழந்தனர். வெனிசுலாவை ஒட்டிய கொலம்பிய எல்லைப் பிரதேசத்தில் உள்ள கேட்டடம்போ பகுதியில் தேசிய விடுதலை ராணுவம் (இ.எல்.என்.), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபார்க்) ஆகிய இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.
ஃபார்க் அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு நிராயுதபாணியை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஃபார்க் அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இ.எல்.என். அமைப்பினர் படுகொலை செய்து வருகின்றனர்.
இரு குழுக்களின் வன்முறைக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாளில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழன் முதல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்த 5 ஆயிரத்திக்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இ.எல்.என்.னுடன் நடத்தி வந்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கோகைன் வர்த்தக தலமாக உள்ள இப்பகுதியில் யார் வர்தகத்தை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக போட்டி குழுக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


