எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வருகிற 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மற்றும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வருகிற 24-ம் தேதி முதல் தொடக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் அறிவியல்/கலை கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி நிறுவனங்கள் ஒப்படைத்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
அதேபோன்று, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ.,எம்டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்யேக நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
அதன்படி 2025-ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 22ம் தேதி நடைபெறும் என்றும், எம்.இ.,எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிராத்தியோக நுழைவுத் தேர்வு வருகிற மார்ச்- மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 24ம் தேதி தொடங்கும் என்றும் http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


