எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார்.
ஹிமானி மோர்
பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று கொடுத்தவர். இந்த நிலையில், அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஹரியாணா மாநிலம், சோனிப்பட்டைச் சேர்ந்த ஹிமானி மோர் என்ற பெண்ணை மணமுடித்துள்ளார்.
ரகசிய திருமணம்
இதனை நீரஜ் சோப்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி விளையாட்டு மேலாண்மை படிப்பை தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார்.
பிரபலங்கள் வாழ்த்து
திருமணத்தைத்தொடர்ந்து நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் ஹிமானியுடனான நீரஜ் சோப்ராவின் பயணம் அழகான நினைவுகளால் நிரப்பப்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


