எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக ஆம் ஆத்மி மூன்றாவது முறையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரசின் சந்தீப் தீட்சித் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரப் போட்டியில் ஈடுபட்டுள்ள புதுடெல்லியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ளனர்.
புதுடெல்லியை தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர், காரவால் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாறாக, படேல் நகர் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா ஐந்து பேர் வீதம் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் உள்ளனர். 2020ல் பட்டியலின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட படேல் நகர் தொகுதியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே களத்தில் போட்டியிட்டனர்.
70 சட்டசபை தொகுதிகளில் 38 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திலக் நகர், மங்கோல்புரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டசபை தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், சாந்தினி சவுக், ராஜேந்திர நகர் மற்றும் மாளவியா நகர் ஆகிய தலா 7 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


