எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ராகுல்காந்தி மீது பா.ஜ.க. தொடுத்துள்ள அடக்கு முறையை எதிர்த்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா பவன் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை யாற்றும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகிற வகையில் இருப்பதாக கூறி வடகிழக்கு மாகாணமான அசாம் மாநிலம், கவுகாத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நேற்ற மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஈரோடு மாநகரில் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம், தலைவர் ராகுல் காந்தி மீது தொடுத்திருக்கும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை முறியடிக்க, இக்கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு பெருமளவில் திரண்டு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


