Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா அணி சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
Woman 2024-03-17

Source: provided

கொழும்பு : மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப்போட்டியில்... 

இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யோகேந்திர பதோரியா 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா சாம்பியன்

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களின் முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.  அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராதிகா பிரசாத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் விக்ராந்த் கெனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து