Idhayam Matrimony

ஐ.சி.சி. பெண்கள் ஒருநாள் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
Smriti-Mandhana 2024-08-21

Source: provided

லண்டன் : ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மந்தனா மட்டுமே.... 

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை அண்மையில் ஐ.சி.சி.வெளியிட்டது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா 41 மற்றும் 73 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் அந்தப் போட்டியில் 135 ரன்கள் எடுத்தார். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

லாரா வோல்வர்ட்....

தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் முதலிடத்திலும், இலங்கையின் சமாரி அத்தப்பட்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், இரண்டு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தில் உள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாத இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 15-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சை பொருத்தவரையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து