எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் படப்பிடிப்பு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் துவக்கம்...
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ரோகித் புறக்கணிப்பு?
ஐ.சி.சி தொடருக்கு முன்னதாக கேப்டன்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். போட்டியை ஹோஸ்ட் செய்யும் நாட்டில் அனைத்து அணி கேப்டன்களும் சந்தித்து கோப்பையுடன் குழுப் படம் எடுத்துக் கொள்வார்கள். இந்த சந்திப்பானது பாகிஸ்தானில் பிப். 17 அல்லது 18 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் நிலையில், ரோகித் சர்மா பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.
ஜெர்சியால் சர்ச்சை...
முன்னதாக, போட்டியை நாடான பாகிஸ்தானின் பெயரை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பொறிக்க பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாகவும், ஐ.சி.சி இதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


