எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார்.
மெல்போர்னில்...
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.
தொடக்கம் முதலே...
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மேடிசன் கீச், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபாரமாக விளையாடினார்.
இதன் மூலம் 2வது மற்றும் 3வது செட்டை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


