Idhayam Matrimony

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2025-01-23

Source: provided

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, சென்னை கவர்னர் மாளிகை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது  உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். 

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, சென்னை கவர்னர் மாளிகை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"பராக்கிரம தினத்தில், தேசிய சுதந்திர போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோரை ஈடுபடுத்த வைத்த ஒரு உயர்ந்த தேசியவாதத் தலைவரும் தொலைநோக்குப் பார்வையாளருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு நாடு நெஞ்மார்ந்த மரியாதை செலுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்பட எண்ணற்ற ஆண்களும் பெண்களும் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) கீழ் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வீரத்துடன் போராடினர்.

அவரது புரட்சிகர லட்சியங்கள் 1946-ம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தன. இது ஆங்கிலேயர்களை நடுங்கச் செய்ததுடன் இந்தியாவிலிருந்து அவர்கள் வெளியேறுவதையும் நமது தேசிய சுதந்திரத்தை விரைவாகவும் கிடைக்க வைத்தது. நேதாஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் மரபும் நம்பிக்கை நிறைந்த, திறமையான மற்றும் சுயசார்பு, பாரதத்துக்கான தேடலில் ஈடுபட தொடர்ந்து நமது இளைஞர்களைத்தூண்டி வருகின்றன. ஜெய் ஹிந்த்!" தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து