Idhayam Matrimony

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. மனு

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
CBCID

Source: provided

புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து முழுதாக இரண்டு ஆண்டுகள் முடிந்தபோதும் கூட, இதுவரை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பல முறை மனு தாக்கல் செய்து அவகாசமும் பெற்றுள்ளனர். இந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து