Idhayam Matrimony

சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ்: உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
Udhayanidhi 2024-11-25

Source: provided

சென்னை: சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடைபெற்ற நிகழ்வில், சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ள எவரெஸ்ட் எக்ஸ்பெடிஷனில் (எவெரெஸ்ட் பயணம்) கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர் யு.ஆஷிஷ்-க்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், தோஹாவில் நடைபெற உள்ள வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீ.சரவணனுக்கு ரூ.1.40 லட்சத்திற்கான காசோலையையும், பன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள ஆர். ஷாச்சி சாய்-க்கு ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையையும், சைக்ளிங் விளையாட்டு வீரர்களான ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் மற்றும் பி.பிரதீப் ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 7,38,403/- செலவில் அதிநவீன பந்தைய சைக்கிள்களையும் வழங்கினார்

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அபய் சிங் (ஸ்குவாஷ்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

மேலும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான கையுந்து போட்டி, இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பு   நடத்திய 68-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கூடைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் 60 வீரர், வீராங்கனைகள் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து