Idhayam Matrimony

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி-20 தொடர்: சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      விளையாட்டு
23-Ram-50

Source: provided

கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியா 118 ரன்கள்....

19 வயதுட்பட்டோருக்கான ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 

தலா 2 விக்கெட்கள்...

சிறப்பாக விளையாடிய கொங்கடி த்ரிஷா 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் அரைசதம் குவிக்கத் தவறினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மிதிலா வினோத் 16 ரன்களும், ஜோஷிதா 14 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பிரமுடி மேத்சரா, லிமன்சா திலகரத்ண, அசெனி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ராஷ்மிகா, சமோடி மற்றும் மனூடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி....

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ராஷ்மிகா செவ்வந்தி அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் ஷப்னம், ஜோஷிதா மற்றும் பருணிகா சிசோடியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷி சுக்லா மற்றும் வைஷ்ணவி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி த்ரிஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து