Idhayam Matrimony

கர்நாடக அரசின் விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
kiccha-sudeep 2025-01-24

Source: provided

பெங்களூரு: கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களால் தமிழ் மக்களிடையே பிரபலமானவர். கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் கொரோனாவால் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில், 2019 இல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான பயில்வான் படத்துக்காக சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விருதை ஏற்க மறுத்து கிச்சா சுதீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான பிரிவில் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது மரியாதையாக கருதுகிறேன். தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நான் நிறுத்திக் கொண்டேன். திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த விருதை நான் பெறுவதைவிட அவர்களில் ஒருவருக்கு வழங்கினால் மகிழ்ச்சி. விருதை எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விப்பதை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன். தேர்வுக்குழு என்னை தேர்ந்தெடுத்தது மேலும் ஊக்குவிக்கிறது. தேர்வுக்குழு மற்றும் மாநில அரசிடம் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து