Idhayam Matrimony

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 19 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் தலைவர் விஜய்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
vijay 2025-01-06

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று  ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டு விழாவின்போது எத்தனை கொண்டாட்டங்கள் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், த.வெ.க.வில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து