எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கபடி போட்டியின் போது வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்தததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்பட வில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


