எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். அதிரடி தொடக்க வீரராக போற்றப்படுபவர். இவர் ஆர்த்தி என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யவிர் மற்றும் வேதந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆர்யவிர் சேவாக், 19 வயதுக்கு குறைவானோருக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சேவாக் அவரது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது மனைவி இல்லாதது குறித்து பல்வேறு யூகங்களை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின. இதனிடையே, சேவாக் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்துள்ளனர். இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக இணையதளம் முழுவதும் காட்டுத் தீயாய் செய்தி பரவி வருகின்றது. ஆனால், இந்த செய்திககள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவர் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
______________________________________________________________________________________
ஷிவம் துபே டக் அவுட்
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், அடுத்து மும்பை அணி நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
______________________________________________________________________________________
ஐ.சி.சி. அணியில் 3 இந்திய வீரர்கள்
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு பேரும், நியூசிலாந்து அணியிலிருந்து இருவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, மாட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
______________________________________________________________________________________
வான்கடே மைதானத்தில் சாதனை
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'வான்கடே மைதானத்தின் 50 ஆண்டுகள்'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
______________________________________________________________________________________
ராஞ்சி கோவிலில் பிரார்த்தனை
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார். ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான தோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.தோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


