Idhayam Matrimony

5 பேரை கொன்ற வழக்கு: உ.பி.யில் குற்றவாளி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 5 பேரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் லிசாரி கேட் பகுதியை சேர்ந்த மொயீன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மொயீனின் உறவினரான ஜமீல் ஹுசைன் என்ற நபரை போலீசார் தேடி வந்தனர்.

ஜமீல் ஹுசைன் மீது டெல்லி மற்றும் தானேவில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்கில் ஜமீல் ஹுசைனை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீரட் பகுதியில் ஜமீல் ஹுசைன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று காலை போலீசார் ஜமீல் ஹுசைனின் இருப்பிடத்தை நெருங்கியபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.

அப்போது போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜமீல் ஹுசைன் சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் சொத்து விவகாரத்தில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமீல் ஹுசைன் தனது உறவினர்களான 5 பேரை கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து