Idhayam Matrimony

குடியரசு தினத்தை முன்னிட்டு 21 தமிழ்நாடு காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
Independence 2023-12-29

Source: provided

சென்னை: தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவலர்களுக்கு 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை காவல் ஆய்வாளர்கள் துரைகுமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு, காவல்துறையில் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான ஜனாதிபதியின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், இணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூடுதல் ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர் பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து