எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : குடியரசு தின விழா மேடையில் திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் முன்பக்கமாக சரிந்து விழுந்தார்
குடியரசு தின விழா நாடெங்கிலும் நேற்று (ஜன. 26) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விழா மேடையில் உரையாற்றினார்.
அப்போது அதே மேடையில் அவருக்கு அருகே பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் முன்பக்கமாக சரிந்து விழுந்தார். முதலில், இதை ஆளுநர் கவனிக்கவில்லை. ஆனால், இதைக்கண்டதும், அங்கிருந்த அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நலம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம், குடியரசு தின விழாவில் கலந்துகொண்டவர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


