Idhayam Matrimony

தெலுங்கானாவில் பயங்கரம்: ஆட்டோ லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Accident-1

Source: provided

தெலுங்கானா : தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

தெலங்கானாவில் வாராங்கல் - கம்மம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாளங்களுக்கான இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்றின்மீது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது, லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில், லாரியிலிருந்த இரும்புகள் ஆட்டோவின் மீது சரிந்ததில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. இந்த நிலையில், ஆட்டோவினுள் இருந்தவர்களில் கைக்குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து