எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல்அறிக்கை வெளியான சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரை பழிவாங்குவதை சமூகம் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட வரை தவறாக சித்திரிப்பது குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கும். மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு, காரணமாக இருந்தவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று மாணவிக்கு வழங்க வேண்டும்.
அதுபோல, குற்றவியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீடு, தற்போதைய இழப்பீட்டைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட் முதல் தகவல் அறிக்கைக்கு விவரங்களை கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆலோசனை கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


