எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சைப் அலி கான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக மும்பை போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். சைப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த 19 அன்று, தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் அவரது கை ரேகை, சைப் அலி கான் வீட்டில் இருந்து பெறப்பட்ட 19 கைரேகை மாதிரிகளுடன் பொருந்த வில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் ஊடங்களில் வெளியான இந்த தகவலை மும்பை போலீஸ் மறுத்துள்ளது. கைரேகை ஒத்துபோகின்றனவனா என்பது குறித்த அறிக்கை இன்னும் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட ஷரிபுல் உடைய காவலை நாளை 29-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஷரிபுல் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பதை இன்னும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


