எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
747 ரன்கள் குவிப்பு...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ஐ.சி.சி. விருது...
மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள் ஸ்டாபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) 2012 சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) 2013 சாரா டெய்லர் (இங்கிலாந்து) 2014 மெக் லானிங் (ஆஸ்திரேலியா) 2015 சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) 2016 ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) 2017 ஸ்மிருதி மந்தனா (இந்தியா) 2018 எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) 2019 லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) 2021 நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) 2022 சாமரி அதபத்து (இலங்கை) 2023 ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


