Idhayam Matrimony

ரோகித்துக்கு சிறுவன் கடிதம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா. கடந்த ஆண்டுகளில் இறுதியில் இருந்து இவரது கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மோசமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் பார்ம் இல்லாத காரணத்தால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் ரோகித் ஓய்வு அறிவித்து விடுவார் என தகவல்கள் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த கருத்துக்கு ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்தார். எனது ஓய்வு அறிவிப்பை நான் தான் முடிவு செய்வேன் என திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில் சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் என்றும் வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்றும் 15-வது வயது சிறுவன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம். வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். ஆனால் உங்களின் தலைமை பண்பு சிறப்பாக உள்ளது. தயவுசெய்து ஓய்வு அறிவித்துவிடாதீர்கள். நான் கிரிகெட் பார்ப்பதற்கு காரணமே நீங்கள்தான். உங்கள் ERA-ல் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். இவ்வாறு சிறுவன் கூறியுள்ளார்.

___________________________________________________________________________________

ஜெய்ஷாவின் குழந்தைக்கு ஆசீர்வாதம் 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதன்மூலம் 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். அந்நிகழ்வில் அவரது மகன் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார். கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவிகள் ஜெய் ஷாவின் ஆண் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினர். 

___________________________________________________________________________________

ஆப்கான் வீரருக்கு சிறப்பு விருது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐ.சி.சி. விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

___________________________________________________________________________________

மன்னிப்பு கேட்ட உஸ்பெகிஸ்தான் வீரர்

நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பல வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன், வைஷாலிக்கு நோடிர்பெக் கை குலுக்க மறுத்தார். வைஷாலி கை கொடுக்க முன்வந்தபோது அவர் கை கொடுக்காமல் தன் இருக்கையில் அமர்கிறார். இது, செஸ் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

நான் மற்றவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் கை குலுக்க வேண்டாம் என்றோ, பெண்களை ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ கூறமாட்டேன். என்ன செய்ய வேண்டுமென்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இன்று பல்மகாவிடம் நான் அதை கூறினேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார். அரங்கிற்கு வந்ததும், நான் அப்படி செய்யக் கூடாது என்றும், குறைந்தபட்சம் வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான போட்டி துவங்கும் முன் என்னால் அவர்களிடம் இதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலையாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து