Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக சாம்பியன் டிரோபி தொடரில் இருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

உடற்தகுதி...

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சைக்கு...

பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து