எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி பேரவைக்கு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இன்டியாக கூட்டணியின், சமாஜ்வாதி கட்சி டெல்லியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து ஆம் ஆத்மிக்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறது. இது கடந்த மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க.வை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இன்டியாக கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்தும் யூகத்தை எதிரொலிப்பதாக உள்ளது.
டெல்லியின் ரிதாலாவில் ஜன.30-ம் தேதி நடைபெற இருக்கும் பேரணியில் கெஜ்ரிவாலுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்வார். மேலும் இக்ரா ஹசன் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களும் ஆம் ஆத்மிக்காக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இன்டியாக கூட்டணிக்கு தற்போது தலைமை வகிக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கலாம் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் கடந்த ஆண்டு எழுந்தது.
சமாஜ்வாதி கட்சியைப் போல, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா வரும் 31ம் தேதி முதல் டெல்லியின் பூர்வாஞ்சல் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4, காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டன. என்றாலும் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


