Idhayam Matrimony

உ.பி.யில் மத நிகழ்ச்சியில் மேடை இடிந்து 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பாக்பத்: உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். ஜைன மத சீடர்கள், காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

பாக்பத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தால் அங்கு குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தில் பல பக்தர்கள் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக மேடை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

பாக்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் அஸ்மிதா லால் கூறுகையில், “பரவுத்தில் ஜைன மதத்தினரின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரமேடை இடிந்து விழுந்து 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு 20 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 20 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பா.ஜ.க. யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை.  ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பா.ஜ.க. அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது? ” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து