Idhayam Matrimony

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்து துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டறிந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து