எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்க வகை செய்யும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
திருநங்கை/நம்பிகள், அமெரிக்கப் படைகளில் சேர்வது குறித்த பென்டகனின் கொள்கையை திருத்துமாறு, பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத்தை வலியுறுத்துவதற்கான உத்தரவாக அது அமைந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க இராணுவ சேவையில், மாற்றுப் பாலினத்தவர் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்காலத்தில் தடை ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்.
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் இருவரும் கடந்த திங்கள்கிழமை பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கும் உத்தரவு என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுதான். மேலும் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவு பெரும்பாலும் எதிர்காலத்தில் தடை செய்ய வழிவகுக்கும். அதேவேளையில், இதற்கான கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைத்தான் ஹெக்செத்துக்கு டிரம்ப் எடுத்துக்கூறியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் தனது உத்தரவில், அமெரிக்கப் படைகளின் சேவை, ஒரு மரியாதைக்குரிய, உண்மையுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு, தாங்கள் பிறந்த பாலினத்தை அல்லாமல் வேறு பாலினமாக அடையாளம் காணும் நபர்களுடன் முரண்படுகிறது என்றும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட, இராணுவத் தயார்நிலைக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று தெரிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


