எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகள் ஏறி, சுயம்பு வடிவில் காட்சி தரும் சிவனைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் மலை ஏறிச் செல்வது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள். இதில், மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ம் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. அதில், பக்தர்கள் வருகிற 1-ந் தேதி முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலை ஏறும் பக்தர்கள், பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அது போன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் வைத்து உள்ளனர். கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


