Idhayam Matrimony

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: சென்னையில் ஒருவர் கைது

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
Jaill 20221 01 04

Source: provided

சென்னை : சென்னையில் ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டு உள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை என்.ஐ.ஏ., குழுவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர். அவர், சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து கொண்டே வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மூளைச்சலவை செய்தது தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து