எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்த சுற்றுப்பயணத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் நேற்றும், நேற்று முன்தினமும் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தையும் திறந்து வைத்து சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக (பிப்ரவரி 6,7ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கள ஆய்வின்போது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் முதல்வர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


