Idhayam Matrimony

தேசிய விளையாட்டு போட்டிகள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Modi-2024-08-22

Source: provided

டேராடூன் : தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி டேராடூனில் தொடங்கி வைத்தார்.

உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். பிரதமர் மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் பிற முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் தேசிய விளையாட்டு ஜோதியை ஏந்திச் சென்றார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “உத்தரகண்டில் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறது. இது இந்தியாவின் அபாரமான விளையாட்டுத் திறமையைக் கொண்டாடுகிறது. இது நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து