Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடிய மேரி கோம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      விளையாட்டு
Mary-Kom 2023 06 30

Source: provided

பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் புனித நீராடினார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

மகா கும்பமேளா

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

புனித நீராடினார்

இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட மேரி கோம், தண்ணீரில் ஓடி பாக்சிங்கும் செய்துகாண்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவராக இருந்தாலும்...

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:- இது ஒரு நல்ல அனுபவம். ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இதை உலகத்தரம் வாய்ந்த யாத்திரையாக மாற்றியுள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்க வந்தேன். என மேரிகோம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து